Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:93 — விருந்து

لَيسَ عَلَى الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُناحٌ فيما طَعِموا إِذا مَا اتَّقَوا وَءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَءامَنوا ثُمَّ اتَّقَوا وَأَحسَنوا ۗ وَاللَّهُ يُحِبُّ المُحسِنينَ

நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், கட்டளைகளைக் கடைப்பிடித்து, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, பின்னர் அவர்களுடைய தெய்வ பக்தி மற்றும் நம்பிக்கையை பராமரித்து மேலும் தெய்வ பக்தியை கவனத்தில் கொண்டும் நன்னெறியில் நீடித்தும் இருக்கும் காலம் வரை, அவர் எந்த உணவை உண்பதாலும் குற்றம் செய்தவராக மாட்டார். நன்னெறியாளரைக் கடவுள் நேசிக்கின்றார்.

[5:92] நீங்கள் கடவுள் -க்கு கீழ்ப்படியவேண்டும், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்ப்படிய வேண்டும், மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே கடமை செய்தியைத் திறம்பட அறிவிப்பது மட்டுமே, என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[5:94] நம்பிக்கை கொண்டோரே, (புனித யாத்திரையின் போது) உங்களுடைய கைகளுக்கும், உங்களு டைய அம்புகளுக்கும் எட்டும் தூரத்தில் சில வேட்டைப் பிராணிகளைக் கொண்டு, கடவுள் உங்களைச் சோதிப்பார். கடவுள் உங்களுக் கிடையில், எவர்கள் தனிமையிலும் அவரைக் கவனத்தில் கொள்கின்றனர் என்பதை இவ்வாறு பிரித்துக்காட்டுகின்றார். இதன்பிறகு எவர்கள் வரம்பு மீறுகின்றார்களோ, அவர்கள் வேதனை நிறைந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.