Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 5:94 — விருந்து

நம்பிக்கை கொண்டோரே, (புனித யாத்திரையின் போது) உங்களுடைய கைகளுக்கும், உங்களு டைய அம்புகளுக்கும் எட்டும் தூரத்தில் சில வேட்டைப் பிராணிகளைக் கொண்டு, கடவுள் உங்களைச் சோதிப்பார். கடவுள் உங்களுக் கிடையில், எவர்கள் தனிமையிலும் அவரைக் கவனத்தில் கொள்கின்றனர் என்பதை இவ்வாறு பிரித்துக்காட்டுகின்றார். இதன்பிறகு எவர்கள் வரம்பு மீறுகின்றார்களோ, அவர்கள் வேதனை நிறைந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.

[5:93] நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், கட்டளைகளைக் கடைப்பிடித்து, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, பின்னர் அவர்களுடைய தெய்வ பக்தி மற்றும் நம்பிக்கையை பராமரித்து மேலும் தெய்வ பக்தியை கவனத்தில் கொண்டும் நன்னெறியில் நீடித்தும் இருக்கும் காலம் வரை, அவர் எந்த உணவை உண்பதாலும் குற்றம் செய்தவராக மாட்டார். நன்னெறியாளரைக் கடவுள் நேசிக்கின்றார்.

[5:95] நம்பிக்கை கொண்டோரே, புனித யாத்திரை யின் போது எந்த வேட்டைப் பிராணிகளையும் கொல்லாதீர்கள். எவரேனும் வேண்டுமென்றே ஏதேனும் வேட்டைப் பிராணியைக் கொன்று விட்டால், எத்தனை வேட்டைப் பிராணிகளை அவர் கொன்றாரோ, அதற்குச் சமமான எண்ணிக்கையிலான கால்நடைகள் அவருக்கு அபராதமாகும். உங்களில் உள்ள மக்களில், நீதமான இருவர் இந்த தீர்ப்பை அளிக்க வேண்டும். அவர்கள் அந்தப்பிராணிகள் கஃபாவைச் சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிடில், அவர் ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவரது குற்றத்திற்கு சமமான அளவு நோன்பு இருந்து பரிகாரம் செய்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். முந்தைய குற்றங்களை கடவுள் மன்னித்துவிட்டார். ஆனால் எவரேனும் இப்படிப்பட்ட குற்றத்தை திரும்பவும் செய்தால், கடவுள் அதற்குப் பழி தீர்ப்பார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழிதீர்ப்பவர்.