குர்ஆன் 5:95 — விருந்து
நம்பிக்கை கொண்டோரே, புனித யாத்திரை யின் போது எந்த வேட்டைப் பிராணிகளையும் கொல்லாதீர்கள். எவரேனும் வேண்டுமென்றே ஏதேனும் வேட்டைப் பிராணியைக் கொன்று விட்டால், எத்தனை வேட்டைப் பிராணிகளை அவர் கொன்றாரோ, அதற்குச் சமமான எண்ணிக்கையிலான கால்நடைகள் அவருக்கு அபராதமாகும். உங்களில் உள்ள மக்களில், நீதமான இருவர் இந்த தீர்ப்பை அளிக்க வேண்டும். அவர்கள் அந்தப்பிராணிகள் கஃபாவைச் சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிடில், அவர் ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவரது குற்றத்திற்கு சமமான அளவு நோன்பு இருந்து பரிகாரம் செய்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். முந்தைய குற்றங்களை கடவுள் மன்னித்துவிட்டார். ஆனால் எவரேனும் இப்படிப்பட்ட குற்றத்தை திரும்பவும் செய்தால், கடவுள் அதற்குப் பழி தீர்ப்பார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழிதீர்ப்பவர்.
[5:94] நம்பிக்கை கொண்டோரே, (புனித யாத்திரையின் போது) உங்களுடைய கைகளுக்கும், உங்களு டைய அம்புகளுக்கும் எட்டும் தூரத்தில் சில வேட்டைப் பிராணிகளைக் கொண்டு, கடவுள் உங்களைச் சோதிப்பார். கடவுள் உங்களுக் கிடையில், எவர்கள் தனிமையிலும் அவரைக் கவனத்தில் கொள்கின்றனர் என்பதை இவ்வாறு பிரித்துக்காட்டுகின்றார். இதன்பிறகு எவர்கள் வரம்பு மீறுகின்றார்களோ, அவர்கள் வேதனை நிறைந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.
[5:96] கடலில் உள்ள எல்லா மீன்களும் நீங்கள் உண்பதற்கு சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு ள்ளது. புனித யாத்திரையின் போது, நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, இது உங்களுக்கு உணவாக வழங்கப்படலாம். புனித யாத்திரை முழுவதும் நீங்கள் வேட்டையாடக்கூடாது. எவருக்கு முன்னால் நீங்கள் வரவழைக்கப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.