குர்ஆன் 5:96 — விருந்து
கடலில் உள்ள எல்லா மீன்களும் நீங்கள் உண்பதற்கு சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு ள்ளது. புனித யாத்திரையின் போது, நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, இது உங்களுக்கு உணவாக வழங்கப்படலாம். புனித யாத்திரை முழுவதும் நீங்கள் வேட்டையாடக்கூடாது. எவருக்கு முன்னால் நீங்கள் வரவழைக்கப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
[5:95] நம்பிக்கை கொண்டோரே, புனித யாத்திரை யின் போது எந்த வேட்டைப் பிராணிகளையும் கொல்லாதீர்கள். எவரேனும் வேண்டுமென்றே ஏதேனும் வேட்டைப் பிராணியைக் கொன்று விட்டால், எத்தனை வேட்டைப் பிராணிகளை அவர் கொன்றாரோ, அதற்குச் சமமான எண்ணிக்கையிலான கால்நடைகள் அவருக்கு அபராதமாகும். உங்களில் உள்ள மக்களில், நீதமான இருவர் இந்த தீர்ப்பை அளிக்க வேண்டும். அவர்கள் அந்தப்பிராணிகள் கஃபாவைச் சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிடில், அவர் ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவரது குற்றத்திற்கு சமமான அளவு நோன்பு இருந்து பரிகாரம் செய்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். முந்தைய குற்றங்களை கடவுள் மன்னித்துவிட்டார். ஆனால் எவரேனும் இப்படிப்பட்ட குற்றத்தை திரும்பவும் செய்தால், கடவுள் அதற்குப் பழி தீர்ப்பார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழிதீர்ப்பவர்.
[5:97] கடவுள் புனித மஸ்ஜிதான* கஃபாவை, மனி தர்களுக்கும், இன்னும் புனித மாதங் களுக்கும், (புனித மஸ்ஜிதிற்குரிய) பலிப்பிரா ணிகளுக்கும், அவற்றை அடையாளங் காட்டும் மாலைகளுக்கும் புகலிடமாக ஆக்கி யுள்ளார். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக் கின்றார், மேலும் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.