குர்ஆன் 5:97 — விருந்து
கடவுள் புனித மஸ்ஜிதான* கஃபாவை, மனி தர்களுக்கும், இன்னும் புனித மாதங் களுக்கும், (புனித மஸ்ஜிதிற்குரிய) பலிப்பிரா ணிகளுக்கும், அவற்றை அடையாளங் காட்டும் மாலைகளுக்கும் புகலிடமாக ஆக்கி யுள்ளார். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக் கின்றார், மேலும் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
[5:96] கடலில் உள்ள எல்லா மீன்களும் நீங்கள் உண்பதற்கு சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு ள்ளது. புனித யாத்திரையின் போது, நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, இது உங்களுக்கு உணவாக வழங்கப்படலாம். புனித யாத்திரை முழுவதும் நீங்கள் வேட்டையாடக்கூடாது. எவருக்கு முன்னால் நீங்கள் வரவழைக்கப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.
[5:98] கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர் மேலும் கடவுள் மன்னிப் பவர், மிக்க கருணையாளர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.