குர்ஆன் 50:16 — க
மனிதனை நாமே படைத்தோம், மேலும் அவன் தனக்குள் கிசுகிசுத்துக் கொள்வது என்ன என்பதையும் நாம் அறிவோம். அவனுடைய கழுத்துப் பெரு நரம்பை விடவும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக நாம் இருக்கின்றோம்.
[50:15] முதல் படைப்பால் நமக்கு மிகவும் சுமையாகி விட்டதா? இதனால்தான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படுதலை அவர்கள் சந்தேகிக் கின்றனரா?
[50:17] பதிவு செய்கின்ற இரண்டு (வானவர்கள்), வலப்புறமும் மற்றும் இடப்புறமும், விடாமல் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருக் கின்றனர்.