Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 53:32 — நட்சத்திரங்கள்

அவர்கள் சிறு குற்றங்களைத் தவிர, பெரும் பாவங்களையும் மேலும் வரம்பு மீறுதல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள். உம்முடைய இரட்சகரின் மன்னிப்பு மிகவும் பெரியது ஆகும். பூமியிலிருந்து அவர் உங்களைத் துவக்கியது முதல், மேலும் நீங்கள் உங்களுடைய தாய்மார் களின் வயிறுகளில் கருக்களாக இருந்த சமயத்திலும் உங்களைப்பற்றி அவர் முற்றிலும் அறிந்தவராக இருந்து வந்திருக்கின்றார். ஆகையால், உங்களையே நீங்கள் உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நன்னெறியாளர்களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

[53:31] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள் - க்கே உரியது. தீமை புரிபவர்களுக்கு அவர்களு டைய காரியங்களுக்குரிய கூலியை அவர் கொடுப்பார், மேலும் நன்னெறியாளர்களுக்கு அவர்களுடைய நன்னெறிக்குரிய வெகுமதி யளிப்பார்.

[53:33] திரும்பிச் சென்று விட்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?