குர்ஆன் 53:33 — நட்சத்திரங்கள்
திரும்பிச் சென்று விட்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?
[53:32] அவர்கள் சிறு குற்றங்களைத் தவிர, பெரும் பாவங்களையும் மேலும் வரம்பு மீறுதல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள். உம்முடைய இரட்சகரின் மன்னிப்பு மிகவும் பெரியது ஆகும். பூமியிலிருந்து அவர் உங்களைத் துவக்கியது முதல், மேலும் நீங்கள் உங்களுடைய தாய்மார் களின் வயிறுகளில் கருக்களாக இருந்த சமயத்திலும் உங்களைப்பற்றி அவர் முற்றிலும் அறிந்தவராக இருந்து வந்திருக்கின்றார். ஆகையால், உங்களையே நீங்கள் உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நன்னெறியாளர்களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[53:34] அரிதாகவே அவன் தர்மம் கொடுத்தான், மேலும் அப்போதும் மிகக் குறைவாகவே.