குர்ஆன் 54:28 — நிலவு
அவர்களுக்கிடையில் தண்ணீர் பங்கு வைக்கப்பட வேண்டும் என அவர்களுக்குத் தெரிவிப்பீராக; அதற்கென நியமிக்கப்பட்ட நாளில் அது (அப் பெண் ஒட்டகம்) அருந்த அனுமதிக்கப்பட வேண்டும்.
[54:27] ஒட்டகத்தை அவர்களுக்கு ஒரு சோதனையாக நாம் அனுப்புகின்றோம். அவர்களைக் கண் காணிப்பீராக மேலும் பொறுமையுடன் இருப்பீராக.
[54:29] ஆனால் அவர்கள் தங்களுடைய நண்பனை (அவ்வொட்டகத்தினைக்) கொல்லுமாறு தூண்டினார்கள், அவனும் இணங்கினான்.