Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:10 — இரும்பு

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்ற போது, ஏன் நீங்கள் கடவுள் - ன் நிமித்தம் செலவு செய்யாதிருக்கின்றீர்கள்? உங்களுக்கிடையில், வெற்றிக்கு முன்னரே செலவு செய்து பாடுபட்டவர்கள் மற்றவர்களிலிருந்து சிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் வெற்றிக்குப் பின்னர் செலவு செய்து பாடுபட்டவர்களை விட மிகவும் மேலான ஓர் அந்தஸ்தை அடைகின்றனர். ஒவ்வொரு தரப் பினருக்கும், கடவுள் மீட்சியை வாக்களிக் கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[57:9] அவர்தான் உங்களை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குள் வழிநடத்துவதற்காக, தன்னுடைய அடியாருக்குத் தெளிவான வெளிப்பாடுகளை இறக்கி அனுப்பியவர். கடவுள் உங்கள் பால் இரக்கமுள்ளவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றார்.

[57:11] நன்னெறியின் ஒரு கடனை கடவுள்-க்கு கடனாக அளித்து, அதனைத் தனக்குப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளவும், மேலும் தாராளமான தொரு பிரதிபலனை அடைந்து கொள்ளவும் விரும்புகின்றவர் யார்?