Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:11 — இரும்பு

நன்னெறியின் ஒரு கடனை கடவுள்-க்கு கடனாக அளித்து, அதனைத் தனக்குப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளவும், மேலும் தாராளமான தொரு பிரதிபலனை அடைந்து கொள்ளவும் விரும்புகின்றவர் யார்?

[57:10] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துச் செல்வங்களையும் கடவுள் தன்வசம் வைத்திருக்கின்ற போது, ஏன் நீங்கள் கடவுள் - ன் நிமித்தம் செலவு செய்யாதிருக்கின்றீர்கள்? உங்களுக்கிடையில், வெற்றிக்கு முன்னரே செலவு செய்து பாடுபட்டவர்கள் மற்றவர்களிலிருந்து சிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் வெற்றிக்குப் பின்னர் செலவு செய்து பாடுபட்டவர்களை விட மிகவும் மேலான ஓர் அந்தஸ்தை அடைகின்றனர். ஒவ்வொரு தரப் பினருக்கும், கடவுள் மீட்சியை வாக்களிக் கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[57:12] நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, அவர்களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு வலப்புறமும் தங்களுடைய ஒளிகளுடன் பிரகாசித்தவர்களாக நீர் காணும் அந்நாள் வரும். உங்களுக்குரிய நற்செய்தியாவது, அந்நாளில், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்பதாகும். அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.