குர்ஆன் 57:12 — இரும்பு
நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, அவர்களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு வலப்புறமும் தங்களுடைய ஒளிகளுடன் பிரகாசித்தவர்களாக நீர் காணும் அந்நாள் வரும். உங்களுக்குரிய நற்செய்தியாவது, அந்நாளில், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்பதாகும். அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[57:11] நன்னெறியின் ஒரு கடனை கடவுள்-க்கு கடனாக அளித்து, அதனைத் தனக்குப் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ளவும், மேலும் தாராளமான தொரு பிரதிபலனை அடைந்து கொள்ளவும் விரும்புகின்றவர் யார்?
[57:13] அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களிடம், “ தயவு செய்து உங்களுடைய ஒளியிலிருந்து கொஞ்சம் கிரகித்துக் கொள்ள எங்களை அனுமதியுங்கள்” என்று கூறுவார்கள். “ உங்களுக்குப் பின்னால் திரும்பிச்சென்று, ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறப்படும். அவர்களுக் கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்படும், அவற்றின் கதவுகள் உட்புறத்தின் கருணையை, வெளிப்புறத்தின் தண்டனையிலிருந்து பிரித்து வைக்கும்.