குர்ஆன் 57:13 — இரும்பு
அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களிடம், “ தயவு செய்து உங்களுடைய ஒளியிலிருந்து கொஞ்சம் கிரகித்துக் கொள்ள எங்களை அனுமதியுங்கள்” என்று கூறுவார்கள். “ உங்களுக்குப் பின்னால் திரும்பிச்சென்று, ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறப்படும். அவர்களுக் கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்படும், அவற்றின் கதவுகள் உட்புறத்தின் கருணையை, வெளிப்புறத்தின் தண்டனையிலிருந்து பிரித்து வைக்கும்.
[57:12] நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களை, அவர்களுக்கு முன்னாலும் மேலும் அவர்களுக்கு வலப்புறமும் தங்களுடைய ஒளிகளுடன் பிரகாசித்தவர்களாக நீர் காணும் அந்நாள் வரும். உங்களுக்குரிய நற்செய்தியாவது, அந்நாளில், ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள் என்பதாகும். அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[57:14] அவர்களை அவர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் பதிலளிப்பார்கள், “ஆம், ஆனால் நீங்கள் கடவுள்-ன் தீர்ப்பு வரும் வரை, உங்களுடைய ஆன்மாக்களை ஏமாற்றிக் கொண்டீர்கள், தயங்கினீர்கள், சந்தேகித்தீர்கள், மேலும் உங்களுடைய விருப்பம் நிறைந்த எண்ணங்களால் வழிதவறியவர்கள் ஆகிவிட்டீர்கள். மாயைகளின் மூலம் கடவுள்-இடமிருந்து நீங்கள் திசை திருப்பப்பட்டு விட்டீர்கள்.