Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:14 — இரும்பு

அவர்களை அவர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் பதிலளிப்பார்கள், “ஆம், ஆனால் நீங்கள் கடவுள்-ன் தீர்ப்பு வரும் வரை, உங்களுடைய ஆன்மாக்களை ஏமாற்றிக் கொண்டீர்கள், தயங்கினீர்கள், சந்தேகித்தீர்கள், மேலும் உங்களுடைய விருப்பம் நிறைந்த எண்ணங்களால் வழிதவறியவர்கள் ஆகிவிட்டீர்கள். மாயைகளின் மூலம் கடவுள்-இடமிருந்து நீங்கள் திசை திருப்பப்பட்டு விட்டீர்கள்.

[57:13] அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களிடம், “ தயவு செய்து உங்களுடைய ஒளியிலிருந்து கொஞ்சம் கிரகித்துக் கொள்ள எங்களை அனுமதியுங்கள்” என்று கூறுவார்கள். “ உங்களுக்குப் பின்னால் திரும்பிச்சென்று, ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறப்படும். அவர்களுக் கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப்படும், அவற்றின் கதவுகள் உட்புறத்தின் கருணையை, வெளிப்புறத்தின் தண்டனையிலிருந்து பிரித்து வைக்கும்.

[57:15] “ஆகையால், இன்றைய தினம் உங்களிட மிருந்தோ, அன்றி நம்பமறுப்பவர்களிடமிருந்தோ ஈட்டுத் தொகை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாக இருக்கும்; அதுவே உங்களுடைய எஜமானாகும், மேலும் துன்பகரமான தங்குமிடமாகும்.”