Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:15 — இரும்பு

“ஆகையால், இன்றைய தினம் உங்களிட மிருந்தோ, அன்றி நம்பமறுப்பவர்களிடமிருந்தோ ஈட்டுத் தொகை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாக இருக்கும்; அதுவே உங்களுடைய எஜமானாகும், மேலும் துன்பகரமான தங்குமிடமாகும்.”

[57:14] அவர்களை அவர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்றவாறு அழைப்பார்கள். அவர்கள் பதிலளிப்பார்கள், “ஆம், ஆனால் நீங்கள் கடவுள்-ன் தீர்ப்பு வரும் வரை, உங்களுடைய ஆன்மாக்களை ஏமாற்றிக் கொண்டீர்கள், தயங்கினீர்கள், சந்தேகித்தீர்கள், மேலும் உங்களுடைய விருப்பம் நிறைந்த எண்ணங்களால் வழிதவறியவர்கள் ஆகிவிட்டீர்கள். மாயைகளின் மூலம் கடவுள்-இடமிருந்து நீங்கள் திசை திருப்பப்பட்டு விட்டீர்கள்.

[57:16] கடவுள்-ன் செய்திக்காகவும் மேலும் இதிலே வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய இதயங்களைத் திறந்து கொள்ள வேண்டிய நேரம் இது இல்லையா? காலப்போக்கில் தங்களுடைய இதயங்கள் கடினமாகிப்போன முந்திய வேதங்களைப் பின்பற்றியவர்களைப் போன்று அவர்கள் இருக்கக்கூடாது, மேலும், அதன் விளைவாக, அவர்களில் பலர் தீயவர்களாக மாறி விட்டார்கள்.