குர்ஆன் 57:16 — இரும்பு
கடவுள்-ன் செய்திக்காகவும் மேலும் இதிலே வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய இதயங்களைத் திறந்து கொள்ள வேண்டிய நேரம் இது இல்லையா? காலப்போக்கில் தங்களுடைய இதயங்கள் கடினமாகிப்போன முந்திய வேதங்களைப் பின்பற்றியவர்களைப் போன்று அவர்கள் இருக்கக்கூடாது, மேலும், அதன் விளைவாக, அவர்களில் பலர் தீயவர்களாக மாறி விட்டார்கள்.
[57:15] “ஆகையால், இன்றைய தினம் உங்களிட மிருந்தோ, அன்றி நம்பமறுப்பவர்களிடமிருந்தோ ஈட்டுத் தொகை எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாது. நெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாக இருக்கும்; அதுவே உங்களுடைய எஜமானாகும், மேலும் துன்பகரமான தங்குமிடமாகும்.”
[57:17] பூமியை, அது இறந்துவிட்ட பின்னர் கடவுள் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் உங்களுக்கு விவரிக்கின்றோம்.