குர்ஆன் 57:17 — இரும்பு
பூமியை, அது இறந்துவிட்ட பின்னர் கடவுள் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் உங்களுக்கு விவரிக்கின்றோம்.
[57:16] கடவுள்-ன் செய்திக்காகவும் மேலும் இதிலே வெளிப்படுத்தப்பட்டுள்ள சத்தியத்திற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுடைய இதயங்களைத் திறந்து கொள்ள வேண்டிய நேரம் இது இல்லையா? காலப்போக்கில் தங்களுடைய இதயங்கள் கடினமாகிப்போன முந்திய வேதங்களைப் பின்பற்றியவர்களைப் போன்று அவர்கள் இருக்கக்கூடாது, மேலும், அதன் விளைவாக, அவர்களில் பலர் தீயவர்களாக மாறி விட்டார்கள்.
[57:18] நிச்சயமாக, தர்மம் செய்கின்ற ஆண்களும் பெண்களும், நன்மையின் கடனைக் கடவுள்-க்கு கடனளித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காகப் பெருக்கிப்பெற்றுக் கொள்வார்கள்; அவர்கள் தாராளமானதொரு பிரதிபலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.