Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:18 — இரும்பு

நிச்சயமாக, தர்மம் செய்கின்ற ஆண்களும் பெண்களும், நன்மையின் கடனைக் கடவுள்-க்கு கடனளித்துள்ளனர். அவர்கள் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காகப் பெருக்கிப்பெற்றுக் கொள்வார்கள்; அவர்கள் தாராளமானதொரு பிரதிபலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.

[57:17] பூமியை, அது இறந்துவிட்ட பின்னர் கடவுள் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவ்வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் உங்களுக்கு விவரிக்கின்றோம்.

[57:19] கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக் கை கொண்டவர்கள் புனிதர்களும் உயிர்த்தி யாகிகளும் ஆவார்கள். அவர்களுடைய வெகுமதிகளும் மற்றும் அவர்களுடைய ஒளியும் அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர் களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நம் வெளிப் பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.