Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:28 — இரும்பு

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் மேலும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். அப்போது அவர் தன்னுடைய கருணையிலிருந்து இருமடங்கு வெகுமதியை வழங்குவார், உங்களை வழிநடத்துவதற்காக உங்களுக்கு ஒளியை கொடையளிப்பார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[57:27] அவர்களுக்குப் பிறகும், நம்முடைய தூதர்களை நாம் அனுப்பினோம். மேரியின் மகன் இயேசுவை நாம் அனுப்பினோம், மேலும் இன்ஜீலை (சுவிசேஷம்) நாம் அவருக்குத் தந்தோம், மேலும் அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் கனிவையும் கருணையையும் நாம் அமைத் தோம். ஆனால் அவர்களுக்கு நாம் ஒருபோதும் விதித்திராத துறவறத்தை அவர்கள் கண்டு பிடித்துக் கொண்டனர். அவர்களிடம் நாம் செய்யும் படிக்கேட்டதெல்லாம் கடவுள்-ஆல் அங்கீகரிக் கப்பட்ட கட்டளைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் செய்திருக்க வேண்டியவாறு அத்தூதுச் செய்தியை அவர்கள் உறுதியாகக் கடைபிடிக்கவில்லை. அதன் விளைவாக, அவர்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களுக்குரிய பிரதிபலனை நாம் கொடுத்தோம், அதே சமயம் அவர்களில் பலர் தீயவர்களாகவே இருந்தனர்.

[57:29] இவ்விதமாக, முந்திய வேதத்தைப் பின்பற்று பவர்கள், கடவுள்-ன் கருணைக்கும் மற்றும் அருளுக்கும் அவர்கள் தனியுரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பதையும் மேலும் அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள் எல்லையற்ற அருளை உடையவர்.