குர்ஆன் 57:7 — இரும்பு
கடவுள்-மீதும் மற்றும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து வழங்குங்கள். உங்களில் நம்பிக்கை கொண்டு (தர்மம்) வழங்குபவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[57:6] அவர் இரவைப் பகலுடன் ஒன்று சேர்க்கின்றார், மேலும் பகலை இரவுடன் ஒன்று சேர்க்கின்றார். ஆழ்மனதின் எண்ணங்களை முற்றிலும் அறிந்தவராக அவர் இருக்கின்றார்.
[57:8] உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு தூதர் உங்களை அழைக்கின்ற பொழுது நீங்கள் ஏன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளக் கூடாது? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்களிடமிருந்து ஓர் உறுதிமொழியை அவர் எடுத்திருக்கின்றார்.