குர்ஆன் 57:8 — இரும்பு
உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளுமாறு தூதர் உங்களை அழைக்கின்ற பொழுது நீங்கள் ஏன் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளக் கூடாது? நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்களிடமிருந்து ஓர் உறுதிமொழியை அவர் எடுத்திருக்கின்றார்.
[57:7] கடவுள்-மீதும் மற்றும் அவருடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள், மேலும் அவர் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து வழங்குங்கள். உங்களில் நம்பிக்கை கொண்டு (தர்மம்) வழங்குபவர்கள் மகத்தானதொரு பிரதி பலனுக்குத் தகுதி பெற்று விட்டனர்.
[57:9] அவர்தான் உங்களை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குள் வழிநடத்துவதற்காக, தன்னுடைய அடியாருக்குத் தெளிவான வெளிப்பாடுகளை இறக்கி அனுப்பியவர். கடவுள் உங்கள் பால் இரக்கமுள்ளவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றார்.