குர்ஆன் 58:11 — தர்க்கம்
يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا قيلَ لَكُم تَفَسَّحوا فِى المَجٰلِسِ فَافسَحوا يَفسَحِ اللَّهُ لَكُم ۖ وَإِذا قيلَ انشُزوا فَانشُزوا يَرفَعِ اللَّهُ الَّذينَ ءامَنوا مِنكُم وَالَّذينَ أوتُوا العِلمَ دَرَجٰتٍ ۚ وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ
நம்பிக்கை கொண்டோரே, “இடமளியுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால், நீங்கள் ஒருவருக்கொருவர் அமர்வதற்கு இடமளிக்க வேண்டும். கடவுள் அப்போது உங்களுக்கு இடமளிப்பார். எழுந்து நகரும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டால், எழுந்து நகர்ந் திடுங்கள். உங்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களையும், மேலும் அறிவு பெற்றவர் களையும் உயர் அந்தஸ்துக்களுக்குக் கடவுள் உயர்த்துகின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[58:10] இரகசியச்சூழ்ச்சியானது சாத்தானின் யோச னையாகும், அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தீங்கு செய்ய அவன் முயலுகின்றான். எப்படியிருப்பினும், கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்களுக்கு அவன் தீங்கு செய்ய இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[58:12] நம்பிக்கை கொண்டோரே, தூதருடன் கலந்தா லோசிக்க நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன்னர், நீங்கள் (ஏழைகளுக்கு) ஒரு தர்மத்தை அளிக்க வேண்டும். இது உங்களுக்கு மேலானதும், தூய்மையானதும் ஆகும். உங்களால் அது இயலாவிட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.