Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:10 — தர்க்கம்

இரகசியச்சூழ்ச்சியானது சாத்தானின் யோச னையாகும், அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தீங்கு செய்ய அவன் முயலுகின்றான். எப்படியிருப்பினும், கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்களுக்கு அவன் தீங்கு செய்ய இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

[58:9] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இரகசிய மாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், பாவகாரியம், வரம்பு மீறல் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றைச் செய்வதற்காக கலந்தாலோசிக்கக் கூடாது. நன்னெறி மற்றும் பக்தி ஆகியவற்றைச் செய்வதற்காகவே நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-க்கு நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.

[58:11] நம்பிக்கை கொண்டோரே, “இடமளியுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால், நீங்கள் ஒருவருக்கொருவர் அமர்வதற்கு இடமளிக்க வேண்டும். கடவுள் அப்போது உங்களுக்கு இடமளிப்பார். எழுந்து நகரும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டால், எழுந்து நகர்ந் திடுங்கள். உங்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களையும், மேலும் அறிவு பெற்றவர் களையும் உயர் அந்தஸ்துக்களுக்குக் கடவுள் உயர்த்துகின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.