Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:9 — தர்க்கம்

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இரகசிய மாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், பாவகாரியம், வரம்பு மீறல் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றைச் செய்வதற்காக கலந்தாலோசிக்கக் கூடாது. நன்னெறி மற்றும் பக்தி ஆகியவற்றைச் செய்வதற்காகவே நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-க்கு நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.

[58:8] இரகசியமாகச் சூழ்ச்சி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டவர்களாக இருந்தும், பின்னர் சூழ்ச்சி செய்தலை வலியுறுத்துபவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பாவகாரியம், வரம்புமீறல், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியாமை, ஆகிய வற்றைச் செய்வதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உம்மிடம் வரும் போது, கடவுள்-ஆல் கட்டளையிடப்பட்டதை விடுத்து வேறு ஒரு வாழ்த்தைக் கொண்டு உம்மை அவர்கள் வாழ்த்துகின்றனர். அவர்கள் தங்களுக்குள், “நம்முடைய கூற்றுக்களுக் காகக் கடவுள் நம்மைத் தண்டிக்க மாட்டார்” என்று கூறிக்கொள்கின்றனர். அவர்களுக் குரிய ஒரே கைம்மாறு ஜஹன்னாவேயாகும், அதிலே அவர்கள் எரிவார்கள்; எத்தகைய தொரு துன்பகரமான விதி.

[58:10] இரகசியச்சூழ்ச்சியானது சாத்தானின் யோச னையாகும், அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தீங்கு செய்ய அவன் முயலுகின்றான். எப்படியிருப்பினும், கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்களுக்கு அவன் தீங்கு செய்ய இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.