குர்ஆன் 58:8 — தர்க்கம்
இரகசியமாகச் சூழ்ச்சி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டவர்களாக இருந்தும், பின்னர் சூழ்ச்சி செய்தலை வலியுறுத்துபவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பாவகாரியம், வரம்புமீறல், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியாமை, ஆகிய வற்றைச் செய்வதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உம்மிடம் வரும் போது, கடவுள்-ஆல் கட்டளையிடப்பட்டதை விடுத்து வேறு ஒரு வாழ்த்தைக் கொண்டு உம்மை அவர்கள் வாழ்த்துகின்றனர். அவர்கள் தங்களுக்குள், “நம்முடைய கூற்றுக்களுக் காகக் கடவுள் நம்மைத் தண்டிக்க மாட்டார்” என்று கூறிக்கொள்கின்றனர். அவர்களுக் குரிய ஒரே கைம்மாறு ஜஹன்னாவேயாகும், அதிலே அவர்கள் எரிவார்கள்; எத்தகைய தொரு துன்பகரமான விதி.
[58:7] வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? மூன்று மனிதர்கள் எவரும் நான்காமவராக அவர் இல்லாமல், அன்றி ஐவர், ஆறாமவராக அவர் இல்லாமல் அன்றி அதற்குக் குறைவாகவோ, அன்றி அதிக மாகவோ, அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கே அவர்களுடன் அவர் இல்லாமல் இரகசி யமாகச் சூழ்ச்சி செய்ய இயலாது. பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[58:9] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இரகசிய மாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், பாவகாரியம், வரம்பு மீறல் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றைச் செய்வதற்காக கலந்தாலோசிக்கக் கூடாது. நன்னெறி மற்றும் பக்தி ஆகியவற்றைச் செய்வதற்காகவே நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-க்கு நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.