Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:14 — தர்க்கம்

எவர்கள் மீது கடவுள் கோபம் கொண்டிருக் கின்றாரோ, அவர்களுடன் நட்புக்கொண்ட மக்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களோ, அன்றி அவர்களைச் சேர்ந்தவர்களோ அல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே பொய்களால் சத்தியமிடுகின்றனர்!

[58:13] கலந்தாலோசிப்பதற்கு முன்னர் நீங்கள் தர்மம் கொடுக்கத் தவறிவிட்டு, அதற்குப் பின்னர் வருந்தித்திருந்தினால், கடவுள் உங்களுடைய வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவரு டைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[58:15] கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கின்றார். அவர்கள் செய்து கொண்டிருப்பது உண்மையில் துக்ககரமானதாகும்.