குர்ஆன் 58:13 — தர்க்கம்
கலந்தாலோசிப்பதற்கு முன்னர் நீங்கள் தர்மம் கொடுக்கத் தவறிவிட்டு, அதற்குப் பின்னர் வருந்தித்திருந்தினால், கடவுள் உங்களுடைய வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவரு டைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[58:12] நம்பிக்கை கொண்டோரே, தூதருடன் கலந்தா லோசிக்க நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன்னர், நீங்கள் (ஏழைகளுக்கு) ஒரு தர்மத்தை அளிக்க வேண்டும். இது உங்களுக்கு மேலானதும், தூய்மையானதும் ஆகும். உங்களால் அது இயலாவிட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[58:14] எவர்கள் மீது கடவுள் கோபம் கொண்டிருக் கின்றாரோ, அவர்களுடன் நட்புக்கொண்ட மக்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களோ, அன்றி அவர்களைச் சேர்ந்தவர்களோ அல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே பொய்களால் சத்தியமிடுகின்றனர்!