குர்ஆன் 58:5 — தர்க்கம்
நிச்சயமாக, கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுபவர்கள், முன்னிருந்த அவர்களுடைய சகாக்கள் தோல்வியடையுமாறு செய்யப் பட்டதைப்போல், தோல்வியடையுமாறு செய்யப்படுவார்கள். தெளிவான சான்றுகளை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம், மேலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[58:4] விடுதலை செய்வதற்கு ஓர் அடிமையை நீங்கள் காண இயலாமற் போனால், தாம்பத்யத் தொடர்பு களை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் தொடர்ச்சியான இரு மாதங்களுக்கு நீங்கள் நோன்பிருக்க வேண்டும். உங்களால் நோன் பிருக்க இயலாவிட்டால், பின்னர் நீங்கள் அறுபது ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவை கடவுள்-ன் சட்டங்களாகும். நம்ப மறுப்பவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[58:6] கடவுள் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கின்ற அந்நாள் வரும். அவர்கள் அதனை மறந்து விட்ட அதே சமயம், கடவுள் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளார். எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாக இருக்கின்றார்.