Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 58:6 — தர்க்கம்

கடவுள் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கின்ற அந்நாள் வரும். அவர்கள் அதனை மறந்து விட்ட அதே சமயம், கடவுள் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளார். எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாக இருக்கின்றார்.

[58:5] நிச்சயமாக, கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுபவர்கள், முன்னிருந்த அவர்களுடைய சகாக்கள் தோல்வியடையுமாறு செய்யப் பட்டதைப்போல், தோல்வியடையுமாறு செய்யப்படுவார்கள். தெளிவான சான்றுகளை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம், மேலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

[58:7] வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? மூன்று மனிதர்கள் எவரும் நான்காமவராக அவர் இல்லாமல், அன்றி ஐவர், ஆறாமவராக அவர் இல்லாமல் அன்றி அதற்குக் குறைவாகவோ, அன்றி அதிக மாகவோ, அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கே அவர்களுடன் அவர் இல்லாமல் இரகசி யமாகச் சூழ்ச்சி செய்ய இயலாது. பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.