Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:15 — வெளியேற்றம்

அவர்களுடைய விதி அவர்களுக்கு முன்னிருந்த அவர்களைப் போன்ற சகாக் களுடைய விதியைப் போன்றதேயாகும். அவர் களுடைய தீர்மானங்களின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

[59:14] நன்கு பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் ளோ அல்லது சுவர்களுக்குப் பின்னாலோ அவர் கள் இருந்தாலேயன்றி உங்களுடன் சண்டை யிட அவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அவர்களுக்கிடையில், அவர்களுடைய பலம் எதிர்க்க இயலாததைப் போன்று தோன்று கின்றது. அவர்கள் ஒற்றுமையாக இருப்பதாக நீர் நினைக்கக் கூடும், ஆனால் உண்மையில் அவர்களுடைய இதயங்கள் பிரிந்திருக் கின்றன. இது ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.

[59:16] அவர்கள் சாத்தானைப் போன்றவர்கள் ஆவர்; அவன் மனிதனிடம், “நம்ப மறுத்து விடு,” என்று கூறுகின்றான், பின்னர் அவன் நம்ப மறுத்து விட்டவுடன், அவன், “நான் உன்னைக் கைவிடுகின்றேன். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ஐ நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகின்றான்.