குர்ஆன் 59:16 — வெளியேற்றம்
அவர்கள் சாத்தானைப் போன்றவர்கள் ஆவர்; அவன் மனிதனிடம், “நம்ப மறுத்து விடு,” என்று கூறுகின்றான், பின்னர் அவன் நம்ப மறுத்து விட்டவுடன், அவன், “நான் உன்னைக் கைவிடுகின்றேன். பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ஐ நான் அஞ்சுகின்றேன்” என்று கூறுகின்றான்.
[59:15] அவர்களுடைய விதி அவர்களுக்கு முன்னிருந்த அவர்களைப் போன்ற சகாக் களுடைய விதியைப் போன்றதேயாகும். அவர் களுடைய தீர்மானங்களின் விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[59:17] அவர்கள் இருவருக்கும் உரிய விதியானது நரக நெருப்பேயாகும், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக் குரிய கைம்மாறு இதுவேயாகும்.