குர்ஆன் 59:18 — வெளியேற்றம்
நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்- இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்காக முற் படுத்தி அனுப்பியிருப்பது என்ன என்பதைப் பரிசீலித்துக் கொள்ளட்டும். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.
[59:17] அவர்கள் இருவருக்கும் உரிய விதியானது நரக நெருப்பேயாகும், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். வரம்பு மீறியவர்களுக் குரிய கைம்மாறு இதுவேயாகும்.
[59:19] கடவுள்-ஐ மறந்துவிட்டவர்களைப் போன்று நீங்கள் இருக்கக் கூடாது, அதனால் அவர்கள் தங்களையே மறந்து விடுமாறு அவர் செய்து விட்டார். இவர்கள் தான் தீயவர்கள்.