குர்ஆன் 59:4 — வெளியேற்றம்
இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்த்தனர். கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப் பவர்களுக்கு, தண்டனையை நிறைவேற்று வதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.
[59:3] வெளியேறும்படி அவர்களைக் கடவுள் நிர்ப்பந்தித்திருக்காவிட்டால், (வெளியேறும்படி அவர்களை நிர்ப்பந்தித்ததைவிட இன்னும் மிக மோசமாக) இவ்வுலகில் அவர்களை அவர் பழிவாங்கியிருப்பார். மறுவுலகில் நரகத்தின் தண்டனைக்கென அவர்களை அவர் ஒப்படைத்து விடுவார்.
[59:5] ஒரு மரத்தை நீங்கள் வெட்டிவிட்டாலும், அல்லது அதன் அடித்தண்டுடன் அதனை விட்டு விட்டாலும், அது கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே உள்ளது. தீயவர்களை நிச்சயமாக அவர் இழிவுபடுத்துவார்.