Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:9 — வெளியேற்றம்

அவர்களுக்கு முன்னரே நம்பிக்கையாளர் களாக இருந்து கொண்டு, மேலும் அவர்களுக்கு ஓர் இல்லமும், ஒரு புகலிடமும் வழங்கியவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களிடம் குடி பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கின்றனர், மேலும் அவர்களுக்கு உதவி செய்வதில் அவர்களுடைய இதயங்களில் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. உண்மையில், அவர்கள் கொடுத்து விடுபவைகளின் தேவை அவர்களுக்கே இருந்த பொழுதும், அவர்கள் தங்களுக்கும் மேலாக அவர்களுக்கு உடனடியாக முன்னுரிமை கொடுக்கின்றனர். உண்மையில், தங்களுடைய இயல்பான கஞ்சத்தனத்தை வெல்பவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.

[59:8] குடி பெயர்ந்து வந்திருக்கின்ற தேவையுடைய வர்களுக்கு (நீங்கள் கொடுக்க வேண்டும்.) கடவுள்-ன் அருளையும் மற்றும் பிரியத்தையும் தேடிய காரணத்தாலும், மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் ஆதரவளித்த காரணத்தாலும், அவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப் பட்டன. அவர்கள்தான் உண்மையாளர்கள்.

[59:10] அவர்களுக்குப் பின்னர் நம்பிக்கையாளர் களாக ஆனவர்கள், “எங்கள் இரட்சகரே, எங்களையும் மேலும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பீராக, மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் பால் எந்த வெறுப்பும் கொண்டிருப்பதிலிருந்து எங்கள் இதயங்களைத் தடுத்து விடுவீராக. எங்கள் இரட்சகரே, நீர் இரக்கமுடையவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றீர்” என்று கூறுகின்றனர்.