Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:8 — வெளியேற்றம்

குடி பெயர்ந்து வந்திருக்கின்ற தேவையுடைய வர்களுக்கு (நீங்கள் கொடுக்க வேண்டும்.) கடவுள்-ன் அருளையும் மற்றும் பிரியத்தையும் தேடிய காரணத்தாலும், மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் ஆதரவளித்த காரணத்தாலும், அவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப் பட்டன. அவர்கள்தான் உண்மையாளர்கள்.

[59:7] (தோற்கடிக்கப்பட்ட) சமூகங்களிடமிருந்து கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், (ஒரு தர்மம் என்ற முறையில்) கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் சென்றடைய வேண்டும். நீங்கள் அதனை உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், ஏழைகளுக்கும், மேலும் வழிப்போக் கர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வித மாக, அது உங்களுக்கிடையில் உள்ள பலம் பொருந்தியவர்களின் தனி உரிமையுடைய தாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்காது. தூதரால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம், ஆனால் எவற்றை எடுத்துக் கொள்வதிலிருந்து அவர் உங்களைத் தடுக்கின்றாரோ அவற்றை எடுத்துக் கொள்ளா தீர்கள். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். தண்டனையை நிறை வேற்றுவதில் கடவுள் கண்டிப்பானவர்.

[59:9] அவர்களுக்கு முன்னரே நம்பிக்கையாளர் களாக இருந்து கொண்டு, மேலும் அவர்களுக்கு ஓர் இல்லமும், ஒரு புகலிடமும் வழங்கியவர் களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்களிடம் குடி பெயர்ந்து வந்தவர்களை நேசிக்கின்றனர், மேலும் அவர்களுக்கு உதவி செய்வதில் அவர்களுடைய இதயங்களில் எந்தத் தயக்கமும் கொள்வதில்லை. உண்மையில், அவர்கள் கொடுத்து விடுபவைகளின் தேவை அவர்களுக்கே இருந்த பொழுதும், அவர்கள் தங்களுக்கும் மேலாக அவர்களுக்கு உடனடியாக முன்னுரிமை கொடுக்கின்றனர். உண்மையில், தங்களுடைய இயல்பான கஞ்சத்தனத்தை வெல்பவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.