குர்ஆன் 6:109 — கால்நடை
ஓர் அற்புதம் அவர்களிடம் வந்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வதாக கடவுள் மீது பயபக்தியுடன் சத்தியம் செய்தார்கள். “அற்புதங்கள் கடவுள்- இடமிருந்து மட்டுமே வருகின்றன” என்று கூறுவீராக. நீங்கள் முற்றிலும் அறிந்திருப்பது போல், ஓர் அற்புதம் அவர்களிடம் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து நம்ப மறுப்பவர்களாக இருப்பார்கள்.
[6:108] அறியாமையினால் அவர்கள் கடவுள்-ஐ நிந்திக்காமலும், சபிக்காமலும் இருக்கும் பொருட்டு, கடவுள்-க்கு இணையாக, அவர்கள் ஏற்படுத்தியுள்ள இணைத்தெய்வங் களைச் சபிக்காதீர்கள். ஒவ்வொரு பிரிவினரின் செயல்களை அவர்களுடைய கண்களுக்கு நாம் அலங்காரமாக்கியுள்ளோம். இறுதியாக அவர்களுடைய இரட்சகரிடத்தில் அவர்கள் திரும்புவார்கள், அவர் அதன்பிறகு அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.
[6:110] நாம் அவர்களுடைய மனங்களையும் மேலும் அவர்களுடைய இதயங்களையும் கட்டுப் படுத்துகின்றோம். இவ்வாறாக, நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றுஅவர்கள் தீர்மானித்து விட்டதால், நாம் அவர்களை அவர்களுடைய வரம்பு மீறல்களில் முட்டாள்தனமாகப் பெருந் தவறுகள் செய்பவர்களாக விட்டு விட்டோம்.