Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:110 — கால்நடை

நாம் அவர்களுடைய மனங்களையும் மேலும் அவர்களுடைய இதயங்களையும் கட்டுப் படுத்துகின்றோம். இவ்வாறாக, நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றுஅவர்கள் தீர்மானித்து விட்டதால், நாம் அவர்களை அவர்களுடைய வரம்பு மீறல்களில் முட்டாள்தனமாகப் பெருந் தவறுகள் செய்பவர்களாக விட்டு விட்டோம்.

[6:109] ஓர் அற்புதம் அவர்களிடம் வந்துவிட்டால், அவர்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்வதாக கடவுள் மீது பயபக்தியுடன் சத்தியம் செய்தார்கள். “அற்புதங்கள் கடவுள்- இடமிருந்து மட்டுமே வருகின்றன” என்று கூறுவீராக. நீங்கள் முற்றிலும் அறிந்திருப்பது போல், ஓர் அற்புதம் அவர்களிடம் வந்தாலும் அவர்கள் தொடர்ந்து நம்ப மறுப்பவர்களாக இருப்பார்கள்.

[6:111] நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கி அனுப்பியிருந்தாலும்; இறந்தவர்கள் அவர்களிடம் பேசியிருந்தாலும்; நாம் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்களுக்கு முன்னால் ஒன்று கூட்டியிருந் தாலும்; கடவுள் நாடினாலன்றி அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்.