Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:111 — கால்நடை

நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கி அனுப்பியிருந்தாலும்; இறந்தவர்கள் அவர்களிடம் பேசியிருந்தாலும்; நாம் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்களுக்கு முன்னால் ஒன்று கூட்டியிருந் தாலும்; கடவுள் நாடினாலன்றி அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது. உண்மையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவில்லாதவர்களாக இருக்கின்றனர்.

[6:110] நாம் அவர்களுடைய மனங்களையும் மேலும் அவர்களுடைய இதயங்களையும் கட்டுப் படுத்துகின்றோம். இவ்வாறாக, நம்பிக்கை கொள்ளக்கூடாது என்றுஅவர்கள் தீர்மானித்து விட்டதால், நாம் அவர்களை அவர்களுடைய வரம்பு மீறல்களில் முட்டாள்தனமாகப் பெருந் தவறுகள் செய்பவர்களாக விட்டு விட்டோம்.

[6:112] நாம் ஒவ்வொரு வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளையும் - மனிதர்களில் மற்றும் ஜின்களில் உள்ள சாத்தான்களை-ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளால் ஊக்கம் அளித்துக் கொள்ள அனுமதித்தோம். உங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களையும், அவர்கள் இட்டுக் கட்டியவற்றையும் புறக்கணித்து விடு வீராக.