குர்ஆன் 6:114 — கால்நடை
அவர் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப் பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது, கடவுள் -ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக நான் தேடுவேனா?* வேதத்தைப் பெற்றவர்கள் இது உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் வெளிப் படுத்தப்பட்டது என்பதை அறிந்துக் கொள்வார்கள். நீர் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.
[6:113] இது மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களின் மனங்கள் இத்தகைய இட்டுக்கட்டல் களில் கவனம் செலுத்தி மேலும் அவைகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இவ்விதமாக அவர்களு டைய உண்மையான திடநம்பிக்கைகளை* வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.
[6:115] உங்கள் இரட்சகருடைய வார்த்தை சத்தியத் தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது.* அவருடைய வார்த்தைகளை, எதுவும் மாற்ற இயலாது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.