Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:113 — கால்நடை

இது மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாத வர்களின் மனங்கள் இத்தகைய இட்டுக்கட்டல் களில் கவனம் செலுத்தி மேலும் அவைகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இவ்விதமாக அவர்களு டைய உண்மையான திடநம்பிக்கைகளை* வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.

[6:112] நாம் ஒவ்வொரு வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளையும் - மனிதர்களில் மற்றும் ஜின்களில் உள்ள சாத்தான்களை-ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளால் ஊக்கம் அளித்துக் கொள்ள அனுமதித்தோம். உங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களையும், அவர்கள் இட்டுக் கட்டியவற்றையும் புறக்கணித்து விடு வீராக.

[6:114] அவர் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப் பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது, கடவுள் -ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக நான் தேடுவேனா?* வேதத்தைப் பெற்றவர்கள் இது உமது இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன் வெளிப் படுத்தப்பட்டது என்பதை அறிந்துக் கொள்வார்கள். நீர் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.