Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:118 — கால்நடை

நீங்கள் அவருடைய வெளிப்பாடுகளின் மீது உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர் களானால், எதன் மீது கடவுள்-உடைய பெயர் உச்சரிக்கப்பட்டதோ அதிலிருந்து உண்ண வேண்டும்.

[6:117] உம்முடைய இரட்சகர் அவருடைய பாதையை விட்டும் வழிதவறி போய்விட்டவர்கள் எவர் என்பதை முற்றிலும் அறிகின்றார், மேலும் வழிநடத்தப்பட்டவர்கள் எவர் என்பதையும் அவர் முற்றிலும் அறிகின்றார்.

[6:119] எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட்டதோ, அதிலிருந்து நீங்கள் ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும்? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டால் அன்றி, உங்களுக்குத் தடுக்கப்பட்டதை, அவர் உங் களுக்கு விவரித்திருக்கின்றார். உண்மையில், பெரும் பாலான மக்கள் அறிவில்லாமல் அவர்களுடைய சுயஅபிப்ராயங்களைக் கொண்டு மற்றவர்களை தவறான வழியில் நடத்துகின்றார்கள். வரம்பு மீறுகின்றவர்களை உங்களுடைய இரட்சகர் முழுமையாக அறிகின்றார்.