Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:120 — கால்நடை

வெளிப்படையான பாவங்களையும் அதேபோல் மறைவானவற்றையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எவர்கள் பாவங்களை சம்பாதித் தார்களோ அவர்கள் நிச்சயமாக அவர்களுடைய வரம்பு மீறல்களுக்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.

[6:119] எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட்டதோ, அதிலிருந்து நீங்கள் ஏன் உண்ணாமல் இருக்க வேண்டும்? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டால் அன்றி, உங்களுக்குத் தடுக்கப்பட்டதை, அவர் உங் களுக்கு விவரித்திருக்கின்றார். உண்மையில், பெரும் பாலான மக்கள் அறிவில்லாமல் அவர்களுடைய சுயஅபிப்ராயங்களைக் கொண்டு மற்றவர்களை தவறான வழியில் நடத்துகின்றார்கள். வரம்பு மீறுகின்றவர்களை உங்களுடைய இரட்சகர் முழுமையாக அறிகின்றார்.

[6:121] எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட வில்லையோ அதிலிருந்து உண்ணாதீர்கள், ஏனெனில் அது ஒரு அருவருக்கத்தக்க பழக்க மாகும். சாத்தான்கள் அவர்களுடைய கூட்டாளி களை உங்களோடு விவாதிக்கும்படித்தூண்டு வார்கள்; நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால், நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆகி விடுவீர்கள்*.