குர்ஆன் 6:121 — கால்நடை
எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட வில்லையோ அதிலிருந்து உண்ணாதீர்கள், ஏனெனில் அது ஒரு அருவருக்கத்தக்க பழக்க மாகும். சாத்தான்கள் அவர்களுடைய கூட்டாளி களை உங்களோடு விவாதிக்கும்படித்தூண்டு வார்கள்; நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால், நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆகி விடுவீர்கள்*.
[6:120] வெளிப்படையான பாவங்களையும் அதேபோல் மறைவானவற்றையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எவர்கள் பாவங்களை சம்பாதித் தார்களோ அவர்கள் நிச்சயமாக அவர்களுடைய வரம்பு மீறல்களுக்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.
[6:122] மரணித்தவனாக இருந்து, மேலும் நம்மால் உயிர் கொடுக்கப்பட்டு மேலும் அவனுக்கு மக்களிடையே நடமாடும் சக்தியைத்தரும் ஒளி வழங்கப்பட்ட ஒருவன், தன்னால் ஒரு போதும் வெளியேற இயலாதவாறு முற்றிலும் இருளில் இருக்கும் ஒருவனுக்கு ஒப்பாவானா? நம்ப மறுப்பவர்களின் காரியங்கள் இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.