Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:122 — கால்நடை

மரணித்தவனாக இருந்து, மேலும் நம்மால் உயிர் கொடுக்கப்பட்டு மேலும் அவனுக்கு மக்களிடையே நடமாடும் சக்தியைத்தரும் ஒளி வழங்கப்பட்ட ஒருவன், தன்னால் ஒரு போதும் வெளியேற இயலாதவாறு முற்றிலும் இருளில் இருக்கும் ஒருவனுக்கு ஒப்பாவானா? நம்ப மறுப்பவர்களின் காரியங்கள் இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.

[6:121] எதன் மீது கடவுள்-ன் பெயர் கூறப்பட வில்லையோ அதிலிருந்து உண்ணாதீர்கள், ஏனெனில் அது ஒரு அருவருக்கத்தக்க பழக்க மாகும். சாத்தான்கள் அவர்களுடைய கூட்டாளி களை உங்களோடு விவாதிக்கும்படித்தூண்டு வார்கள்; நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால், நீங்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆகி விடுவீர்கள்*.

[6:123] ஒவ்வொரு சமூகத்தின் முக்கியமான குற்றவாளிகளையும் நாம் சூழ்ச்சியும் சதியும் செய்ய அனுமதிக்கின்றோம். ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு எதிராகவே சூழ்ச்சியும் சதியும் செய்கின்றார்கள்.