Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:123 — கால்நடை

ஒவ்வொரு சமூகத்தின் முக்கியமான குற்றவாளிகளையும் நாம் சூழ்ச்சியும் சதியும் செய்ய அனுமதிக்கின்றோம். ஆனால் அவர்கள் உணர்ந்து கொள்ளாமல், அவர்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கு எதிராகவே சூழ்ச்சியும் சதியும் செய்கின்றார்கள்.

[6:122] மரணித்தவனாக இருந்து, மேலும் நம்மால் உயிர் கொடுக்கப்பட்டு மேலும் அவனுக்கு மக்களிடையே நடமாடும் சக்தியைத்தரும் ஒளி வழங்கப்பட்ட ஒருவன், தன்னால் ஒரு போதும் வெளியேற இயலாதவாறு முற்றிலும் இருளில் இருக்கும் ஒருவனுக்கு ஒப்பாவானா? நம்ப மறுப்பவர்களின் காரியங்கள் இவ்விதமாக அவர்களுடைய கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது.

[6:124] ஒரு பலமான சான்று அவர்களிடம் வரும்போது அவர்கள், “கடவுள் - உடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது, எங்களுக்கு கொடுக்கப் படாத வரை நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்!” என்று கூறுகின்றார்கள். அவருடைய செய்தியை அறிவிக்க சிறந்த தகுதியுடையவர் யார் என்பது கடவுள்-க்குத் துல்லியமாக தெரியும்.* இது போன்ற குற்றவாளிகள், அவர்களுடைய தீய சதிச்செயல்களின் விளைவுகளாக கடவுள்-இடத்தில் சிறுமை யையும், மேலும் பயங்கரமான தண்டனை யையும் அனுபவிப்பார்கள்.