குர்ஆன் 6:129 — கால்நடை
இவ்வாறு நாம் தீயவர்களை அவர்களுடைய வரம்புமீறல்களுக்குத் தண்டனையாக ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக இணைப்போம்.
[6:128] அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்த நாள் வரும் போது, ஜின்களே, மனிதர்களில் பெரும்பாலானவர்களை நீங்கள் உங்களுக்கென எடுத்துக் கொண்டீர்கள் (என்று கூறுவார்). அவர்களுடைய மனிதக் கூட்டாளிகள், “எங்களுடைய இரட்சகரே நீர் எங்களுக்குத் தந்த ஆயுட்காலத் தவணையை நாங்கள் வீணாக்கும் வரை, நாங்கள் ஒருவர் மற்றவருடைய துணையில் சுகம் அனுபவித்தோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்களுடைய விதியாகும்” என்று அவர் கூறுவார். கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்க அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். உங்களுடைய இரட்சகர் ஞானமிக்கவர், எல்லாம் அறிந்தவர்.
[6:130] ஜின்களே, மனிதர்களே, உங்களில் இருந்து, என்னுடைய வெளிப்பாடுகளை எடுத்துக் கூறி, மேலும் இந்த நாளின் சந்திப்பை பற்றி எச்சரிக்கை செய்த தூதர்களை நீங்கள் பெறவில்லையா? “ எங்களுக்கெதிரான சாட்சி யாக நாங்களே இருக்கின்றோம்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் முற்றிலும் உலக வாழ்க்கையால் ஆக்ரமிக்கப்பட்டவர் களாக இருந்தார்கள், மேலும் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் என்று அவர்களுக்கெதிராக அவர்களே சாட்சி கூறுவார்கள்.