குர்ஆன் 6:13 — கால்நடை
இரவிலும், பகலிலும், வசிக்கின்ற அனைத்தும் அவருக்கே உரியது, அவர் செவியேற்பவர், அறிந்தவர்.
[6:12] “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எவருக்குரியது?” என்று கூறுவீராக, “கடவுள்-க்கு” என்று கூறுவீராக. அவர் கருணையை தன்னுடைய தன்மையாக விதித்துக் கொண்டார். அவர் உறுதியாக, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில், உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவார், அது தவிர்க்க இயலாதது. நம்ப மறுப்பவர்கள் தான் தங்களுடைய ஆன்மாக்களை நஷ்டப் படுத்திக்கொண்டவர்கள் ஆவர்.
[6:14] “வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கிய வராகவும் மேலும் உணவளிக்கக் கூடிய வராகவும், ஆனால், உணவு அளிக்கப் படாதவராகவும் இருக்கக்கூடிய கடவுள்-ஐத்தவிர, மற்றொன்றை நான் இரட்சகராகவும், எஜமானராகவும் ஏற்றுக்கொள் வேனா?” என்று கூறுவீராக. “நான் மிகவும் அர்ப்பணிப்புடைய அடிபணிந்தவராக இருக்க வேண்டுமென்றும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருக்கக்கூடாது என்றும் உத்தரவிடப் பட்டுள்ளேன்” என்று கூறுவீராக.