குர்ஆன் 6:148 — கால்நடை
سَيَقولُ الَّذينَ أَشرَكوا لَو شاءَ اللَّهُ ما أَشرَكنا وَلا ءاباؤُنا وَلا حَرَّمنا مِن شَيءٍ ۚ كَذٰلِكَ كَذَّبَ الَّذينَ مِن قَبلِهِم حَتّىٰ ذاقوا بَأسَنا ۗ قُل هَل عِندَكُم مِن عِلمٍ فَتُخرِجوهُ لَنا ۖ إِن تَتَّبِعونَ إِلَّا الظَّنَّ وَإِن أَنتُم إِلّا تَخرُصونَ
இணைத்தெய்வங்களை வழிபடுபவர்கள் “கடவுள் நாடியிருந்தால் நாங்களோ, எங்கள் பெற்றோர்களோ இணைத் தெய்வங்களின் வழிபாட்டை அனுஷ்டித்திருக்க மாட்டோம், மேலும் எந்த ஒன்றையும் நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றார் கள். இவ்விதமாகவே அவர்களுக்கு முன் னிருந்தவர்களும், நம்முடைய தண்டனைக்கு அவர்கள் உள்ளாகும் வரை, நம்பமறுத்தனர். “நீங்கள் எங்களுக்கு காட்டக் கூடிய நிரூபிக்கப் பட்ட அறிவாதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா? நீங்கள் பின்பற்றுவது கற்பனைகளைத் தவிர வேறொன்றுமில்லை, நீங்கள் ஊகிக்க மட்டுமே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.
[6:147] அவர்கள் உம்மை நம்ப மறுத்தால், பின்னர் “உங்களுடைய இரட்சகர் எல்லையற்ற கரு ணையை உடையவராகயிருக்கின்றார்,ஆனால் அவருடைய தண்டனை தீயவர்களுக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது” என்று கூறுவீராக.
[6:149] “கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த வாதத்தைத் தன் வசம் வைத்திருக்கின்றார், அவர் நாடினால் உங்கள் அனைவரையும் அவரால் வழி நடத்த இயலும்,” என்று கூறுவீராக.