Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:149 — கால்நடை

“கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த வாதத்தைத் தன் வசம் வைத்திருக்கின்றார், அவர் நாடினால் உங்கள் அனைவரையும் அவரால் வழி நடத்த இயலும்,” என்று கூறுவீராக.

[6:148] இணைத்தெய்வங்களை வழிபடுபவர்கள் “கடவுள் நாடியிருந்தால் நாங்களோ, எங்கள் பெற்றோர்களோ இணைத் தெய்வங்களின் வழிபாட்டை அனுஷ்டித்திருக்க மாட்டோம், மேலும் எந்த ஒன்றையும் நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று கூறுகின்றார் கள். இவ்விதமாகவே அவர்களுக்கு முன் னிருந்தவர்களும், நம்முடைய தண்டனைக்கு அவர்கள் உள்ளாகும் வரை, நம்பமறுத்தனர். “நீங்கள் எங்களுக்கு காட்டக் கூடிய நிரூபிக்கப் பட்ட அறிவாதாரம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா? நீங்கள் பின்பற்றுவது கற்பனைகளைத் தவிர வேறொன்றுமில்லை, நீங்கள் ஊகிக்க மட்டுமே செய்கின்றீர்கள்” என்று கூறுவீராக.

[6:150] “கடவுள் இதையோ அல்லது அதையோ தடை செய்திருக்கின்றார் என சாட்சியம் அளிக்கக் கூடிய உங்களுடைய சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் சாட்சியம் அளித்தால், அவர்களுடன் சாட்சியம் அளிக்காதீர்கள், அன்றியும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களுடைய, மேலும் மறுவுலகை நம்பமறுப்பவர்களுடைய மேலும் தங்களுடைய இரட்சகரிடமிருந்து விலகி வழி தவறியவர்களுடைய அபிப்ராயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.