Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:150 — கால்நடை

قُل هَلُمَّ شُهَداءَكُمُ الَّذينَ يَشهَدونَ أَنَّ اللَّهَ حَرَّمَ هٰذا ۖ فَإِن شَهِدوا فَلا تَشهَد مَعَهُم ۚ وَلا تَتَّبِع أَهواءَ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا وَالَّذينَ لا يُؤمِنونَ بِالءاخِرَةِ وَهُم بِرَبِّهِم يَعدِلونَ

“கடவுள் இதையோ அல்லது அதையோ தடை செய்திருக்கின்றார் என சாட்சியம் அளிக்கக் கூடிய உங்களுடைய சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவீராக. அவர்கள் சாட்சியம் அளித்தால், அவர்களுடன் சாட்சியம் அளிக்காதீர்கள், அன்றியும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களுடைய, மேலும் மறுவுலகை நம்பமறுப்பவர்களுடைய மேலும் தங்களுடைய இரட்சகரிடமிருந்து விலகி வழி தவறியவர்களுடைய அபிப்ராயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம்.

[6:149] “கடவுள் மிகவும் சக்தி வாய்ந்த வாதத்தைத் தன் வசம் வைத்திருக்கின்றார், அவர் நாடினால் உங்கள் அனைவரையும் அவரால் வழி நடத்த இயலும்,” என்று கூறுவீராக.

[6:151] “வாருங்கள், உங்களுடைய இரட்சகர் உண்மையாகவே உங்களுக்குத் தடை செய்திருப்பவற்றை நான் உங்களுக்குக் கூறுகின்றேன் : அவருடன் இணைத்தெய்வங் களை நீங்கள் ஏற்படுத்தக் கூடாது. உங்களு டைய பெற்றோர்களை நீங்கள் கண்ணியப் படுத்தவேண்டும். வறுமைக்கு அஞ்சி உங்களு டைய குழந்தைகளை நீங்கள் கொலை செய்யக் கூடாது-நாமே உங்களுக்கும் அவர்களுக்கும் வழங்குகின்றோம். வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் பாவங்களை நீங்கள் செய்யக்கூடாது. நீதியை நிலைநாட்டுவதற்காக அன்றி-நீங்கள் கொலை செய்யக்கூடாது- கடவுள் உயிரைப் புனிதமாக்கியுள்ளார். நீங்கள் புரிந்து கொள்ளும் பொருட்டு, இவை உங்களுக்கு அவருடைய கட்டளைகள் ஆகும்” என்று கூறுவீராக.